Hot Posts

6/recent/ticker-posts

நம்மை விடுவிக்கிற தேவன்


நம் அனைவருக்கும் அநேக கஷ்டங்கள், பிரச்சனைகள் இந்த உலகத்திலே உண்டு. சிலருக்கு உடல் நிலையில் பிரச்னை, சிலருக்கு பண பிரச்னை, சிலருக்கு கெட்ட பழக்கத்தினால் பிரச்னை, சிலருக்கு கல்வியில் தோல்வி பிரச்னை; இப்படி நம் ஒவ்வொருவருக்கும்  ஒரு பிரச்னை. வேதம் சொல்கிறது யோவான் 16:33 "உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு". இதற்காக நாம் சோர்ந்து போக தேவையில்லை. பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கிற தேவன் நமக்கு உண்டு. வேதத்திலே தேவனுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு பெயர் "யேகோவா மெப்பல்ட்டி (jehovah mephalti)" இதற்கு கிரேக்க மொழியில் "விடுவிக்கிறவர்" என்று பொருள். இந்த பெயர் சங்கீதம் 18:2 இல் கொடுக்கப்பட்டிருக்கிறது. விடுவிக்கிற தேவன் நமக்கு இருக்கிற படியால் நம்முடைய பிரச்சனை நேரத்தில் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அழைப்போம். கண்டிப்பாக நம்மை அவர் விடுவிப்பார் . என்னை அவர் விடுவித்திருக்கிறார், உங்களையும் விடுவிப்பார்.

நாம் கூப்பிடும்போது அவர் நம்மை விடுவிக்கிறார் என்பதற்கு ஆதாரமாக சில வசனங்கள்.......

சங்கீதம் 34:17
     நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார். 
சங்கீதம் 107:6
    தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள், அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை விடுவித்தார்.
சங்கீதம் 50:15
    ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.
ஆமென்.

Post Navi

Post a Comment

0 Comments