குற்றவுணர்ச்சி - அறிக்கை செய்து விட்டு விட வேண்டும்

இன்று நம்முடைய  கிறிஸ்துவ சகோதர சகோதரிகள் சிலர் ஒரு தவறையோ அல்லது பாவத்தையோ செய்துவிட்டு , அதினால் ஏற்படும் குற்றஉணச்சியில் சிக்கி தவிக்கிறோம். இந்த குற்றவுணர்ச்சி பிசாசின் மிக பெரிய ஆயுதம். இந்த குற்றஉணர்ச்சியில் சிக்கி தவிக்கிற நாம் எந்த வேலையையும் சரியாக செய்ய முடியாது. பிசாசும் அவனுடைய சேனையும் தொடர்ந்து நீ  குற்றவாளி உனக்கு விடுதலை கிடையாது என்று நம்மில் சிந்தனைகளை ஏற்படுத்தும்போது நாம் அதை நம்பி கலக்கமுற்று பயத்துடனே, குற்றஉணர்ச்சியுடனே  வாழ்கிறோம். பிசாசின் வேலை இதுதான், அவனுக்கு குற்றஞ்சாட்டுகிறவன் என்று பெயரும் உண்டு ( வெளி 12 : 10 இரவும் பகலும் நம்முடைய தேவனுக்குமுன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத் தள்ளப்பட்டுப்போனான்.) .



நம்முடைய தேவன் நாம் இப்படி குற்றஉணர்ச்சியில் சிக்கி தோல்வியான வாழ்கை வாழ  நம்மை அழைக்கவில்லை. நம்முடைய எல்லா பாவத்தையும், குற்றஉணர்ச்சிகளையும் 2000 ஆண்டுகளுக்கு முன்பே இயேசு சிலுவையில் சுமந்து  தீர்த்துவிட்டார். நாம் சுமப்பதற்கு ஒன்றும் இல்லை. அவர் நம்மை விடுதலை ஆக்கிவிட்டார். எவ்வளவு மகிழ்ச்சி !

நாம் குற்றஉணர்ச்சிகளை  என்ன செய்ய வேண்டும் ?

அறிக்கை செய்து விட்டு விட வேண்டும் 

இந்த இரண்டு வேத வசனங்களை பாருங்கள்  ....

நீதிமொழிகள் 28:13
தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.

I யோவான் 1 : 9
நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.

ஆம் நாம் அறிக்கை செய்து விட்டால் அதை தேவன் நமக்கு மன்னித்து விடுகிறார். இதை நாம் விசுவாசித்து தேவன் நமக்கு வைத்திரும் மேலான திட்டத்தை அறிந்து அதில் நாம் முன்னேறிச்செல்வோம். பிசாசின் இந்த குற்றவுணர்ச்சி தந்திரங்களை முறியடிப்போம். ஆமென்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form