இயேசு நன்மை செய்கிறவராய் சுற்றித்திரிந்தார்



வேதம் சொல்கிறது, அப்போஸ்தலர் 10:38 இல் "அவர் (இயேசு)நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்." என்று. ஆம் இயேசு நன்மை மாத்திரமே செய்கிறவராய் சுற்றித்திரிந்தார். அவர் தீமை செய்யவில்லை, அவரால் தீமை செய்ய முடியாது ஏனென்றால் அவரிடத்தில் கொஞ்சமும் இருள் இல்லை.



கிறிஸ்துவிற்குள் பிறந்த நாமும் கூட தீமை செய்ய கூடாது மற்றும் தீமை செய்ய முடியாது . அப்படி நாம் தீமை செய்கிறவர்களாய் இருப்போமானால் நாம் கிறிஸ்துவிற்குள் இல்லை என்று அர்த்தம்.

சகோதர,  சகோதிரிகளே நாம் சிந்தித்து  பார்ப்போம்...நாம் ஒவ்வொரு நாளும் எத்தனை பேருக்கு நம்மை செய்கிறோம் அல்லது தீமை செய்கிறோம் என்று. மற்றவர்கள் நமக்கு என்ன செய்தார்கள் என்பது அல்ல. கிறித்துவிற்குள் பிறந்த நாம் மற்றவர்களுக்கு நன்மை செய்கிறோமா என்பதுதான் கேள்வி.பழிக்கு பழி அல்ல பகைவனையும் நேசி என்று இயேசு வாழ்ந்து காட்டினார் . நாமும் அவர் வழி நடப்போம்.
Previous Post Next Post

Contact Form