நம் ஒவ்வொருவருக்கும் தன்னை குறித்த ஒரு எண்ணம் இருக்கும். ஒருவர் தன்னை ஞானி என்றும், இன்னொருவர் தன்னை முட்டாள் என்றும், சிலர் தங்களை நல்லவர் என்றும், சிலர் தங்களை பாவி என்றும், சிலர் தங்களை பரிசுத்தவான் என்றும், இன்னும் சிலர் நான் தொட்டது எதுவும் விளங்காது, ராசி இல்லாதவள் என்றும் எண்ணி கொண்டு இருக்கிறோம்.
ஆனால் நாம் எந்த நிலையில் இருந்தாலும், கர்த்தாராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களாய் இருப்போமானால், கர்த்தர் நம்மை வேறு விதமாய் பார்க்கிறார். அவர் விசுவாசிகளாகிய நம்மை யார் என்று சொல்கிறார் தெரியுமா ? சில வசனங்களை வாசியுங்கள் .....
1. நீங்கள் என்னுடைய சாயலாக இருக்கிறீர்கள் .
- தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.(ஆதியாகமம் 1: 27)
2. நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.
- அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.(மத்தேயு 10:31)
- நீர் அவனை தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர்.(சங்கீதம் 8:5)
4. உங்களை மகனாக, மகளாக ஏற்று கொண்டு இருக்கிறேன்.
- நம்மை இயேசுகிறிஸ்துமூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன் குறித்திருக்கிறார்.(எபேசியர் 1:6)
- பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம்..(I யோவான் 3:2)
5. விசுவாசிக்கிற படியால் நீங்கள் நீதிமான்
- ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்.(ரோமர் 4:5)
6. நீங்கள் இரட்சிக்கப்பட்டு இருக்கிறீர்கள்
- கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; (எபேசியர் 2:8)
7. நீங்கள் என்னுடைய சந்ததி, ராஜரீக ஆசாரிய கூட்டம்.
- நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.(I பேதுரு 2:9)
8. என்னுடைய பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் இருக்கிறார்
- உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.(யோவான் 14:17)
9. நீங்கள் எனக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்
- முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள்.(எபேசியர் 5:8)
10. நீங்கள் ஜெயம் கொள்கிறவர்களாய் இருக்கிறீர்கள்
- நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.(1கொரிந்தியர் 15:57)
நம்முடைய கர்த்தர் நம்மை இப்படி பரிசுத்தவானாகவும் , வெளிச்சமாகவும், தன்னுடைய பிள்ளையாகவும் பார்க்கும் போது நாம் நம்மை எதிர்மறையாக வேறு விதமாக பார்க்க தேவை இல்லை.
இப்படி வேதத்தில் நம்மை யாரென்று கர்த்தர் அநேக இடங்களில் வெளிப்படுத்துகிறார்.நம்மை நாம் யார் என்று நினைக்கிறோம் அல்லது மற்றவர்கள் நம்மை என்னவென்று நினைக்கிறார்கள் என்பது முக்கியம் அல்ல. நம்மை கர்த்தர் எப்படி நினைக்கிறார் என்று அறிந்து கொள்ளும் போது நம்முடைய வாழ்கை முறையே மாறி விடும் மற்றும் நம்முடைய இந்த பூமி பயணம் இன்னமும் அர்த்தமுள்ளதாக மாறும்.ஆமென்
